மீனாக்ஷி கல்யாண……
பல்லவி
மீனாக்ஷி கல்யாண வைபோகமே
தானாட்சி செய்யும் மதுரைமாநகரில்
அனுபல்லவி
தேனார் மொழியாள் கேசவன் சோதரி
தீனருக்கருளும் அங்கயற்கண்ணி
சரணம்
ஆநிரை மேய்த்த திருமால் பொரியிட
கோனந்த சொக்கநாதன் மாங்கல்யமருள
மான் விழியாள் திருமகள் பின் தாலி முடிய
நான்முகன் நான்மறை மந்திரங்களோத ….( மீனாக்ஷி கல்யாண…)
வானுறை தேவருமிந்திரனும் வாழ்த்துரைக்க
பானுவும் சந்திரனும் தாரகையும் காட்சி தர
கானுறை முனிவர்கள் வேதங்களோத
நானா விதங்களில் வாத்தியங்கள் முழங்க…(மீனக்ஷி கல்யாண…)
No comments:
Post a Comment