‘கோலச் சுரிசங்கை மாயன்செவ்
வாயின் குணம்வினவும் சீலத் தனள்தென் திருமல்லி
நாடி செழுங்குழல்மேல் மாலைத் தொடைதென் அரங்கருக்(கு)
ஈயும் மதிப்புடைய சோலைக் கிளி,அவள் தூயநற்
பாதம் துணை நமக்கே
அழகிய சுரியுடைய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தைப் பார்த்து ஆச்சர்ய செயல்களை உடைய எம்பெருமானின் சிவந்த திருவதரத்தின் சுவையை விசாரிக்கும் பெருமையை உடையவளும், அழகிய திருமல்லி நாட்டின் தலைவியும், தன்னுடைய அழகிய கூந்தலில் சூடிக்களைந்த பூமாலையைத் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையை உடையவளும், சோலையில் இருக்கும் கிளி போன்றவளுமான ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையும் இனிமையும் பொருந்திய திருவடிகளே நமக்குப் புகலிடம்.
சோலைக்கிளியாம்…….
பல்லவி
சோலைக்கிளியாம் ஆண்டாள் நாச்சியாரின்
தாளினத் துணையென நாளும் பணிந்தேன்
அனுபல்லவி
ஆலிலைதனில் துயிலும் அரங்கன் கேசவனை
மாலனைத் துணையென வரித்து மணந்த
சரணம்
வரியுடைய பாஞ்சஜன்னியமெனும் சங்கை
உரிமையுடன் சுவைக்கும் அரங்கனிதழ்களைப்
பிரியமுடன் தானும் சுவைக்கும் பெருமை கொண்ட
திருமல்லி நாடாளும் கோதையெனும் சுடர்க்கொடியை
No comments:
Post a Comment