பெரிய பிராட்டிக்குப் பூச்சாற்று வைபவம்
கோடை காலம் தொடங கியாச்ணுன்னா எல்லா ஊர்லயும் திருவிழாக்களும் பண்டிகைகளும் மிக விசேஷமா நடக்கும். அப்படி ரங்கனுக்கு பூச்சாற்று முடிஞ்ச உடனே தாயாருக்கு நட்க்கும். பூச்சாற்றுனா என்ன, இதோ சொல்றேன். நிறைய பூக்கள் கொண்டு அலங்காரம் பண்ணின ஒரு பூ ஆடையை தாயாரோட திருமேனியில் பின்புறம் அழகாக ஒரு சால்வை மாதிரி சாற்றுவார்கள் . மகிழம்பூவை வரிவரியாக தலையில் கிரீடம் போல லங்கரித்திருப்பார்கள். வஸ்திரம் மிக எளிமையாக உடுத்தி இருப்பார். பெரிய பிராட்டியார் மூத்தவள் . பாரத்தினாலும் வெட்கத்திலும் கவிழ்ந்த தலையுடன் குவிந்த இதழ்கள் புன்முறுவலிக்க சேவை சாதிப்பார் .காதில் வைரத்தோடுடன் மூக்கில் புல்லாக்கு தொங்கும் . பளிச்சுனு கஸ்தூரி திலகம், திரு மார்பில் பதக்கமாக அரங்கன். இவ்வளவு அழகாக பட்டமகிஷி அரங்கனின் ப்ரிய நாயகி திருவரங்கநாயகி உள்கோடையில் சேர்த்தி மண்டபத்தில் சேவை சாதித்து திருவாரதனம் கண்டருளி திருவந்திக்காப்பு ஆகி பின் ஒன்பது மணியளவில் வீணை ஏகாந்தம் செவிசாய்த்து விட்டு மெள்ள மீண்டும் மூலஸ்தானம் திரும்பும் வைபவம் காண கண்கோடி வேண்டும் . செண்பகபூ வாசனையும் மல்லிகை பூ வாசனையும் வீசும் . சுகந்தம் கமழ காதில் வீணை நாதம் ஒலிக்க தெய்வீகம் அனுபவம்,ஆனந்தம். வாருங்கள் பூச்சாற்று வைபவம் காண……
புறப்படுங்கள்…..
பல்லவி
புறப்படுங்கள் பூச்சாற்று வைபவம் காண
அறம் தழைக்கும் அரங்கநகர் திருத்தலம் தனிலே
அனுபல்லவி
நிறம் பலவும் நிறைந்திருக்கும் அழகிய மலர்களை
சரம் சரமாய்க்கோர்த்தணியும் தாயாரைக் காண
சரணம்
வரந்தரும் பெரிய பிராட்டி வடிவழகி
சிரந்தாழ்த்தி இதழ்களில் புன்னகை தவழ
செவிகளில் வைரத்தோடுடன் மூக்குத்தி மின்ன
மார்பிலவன் பதக்கமுடன் வருமழகைக் காண
No comments:
Post a Comment