தாயே சமயபுரம் …..
பல்லவி
தாயே சமயபுரம் மாரியே
நீயே பூமி தாங்கும் மகமாயியே
அனுபல்லவி
மாயே மரகதமே கேசவன் சோதரியே
ஓயாதுனைத் துதிக்குமெனக்கருள்வாயே
சரணம்
தீயேந்தும் நெற்றிக் கண்ணுடையாள்
சேயெனைக் கனிவுடன் காக்கும் தேவி
நோயதனை அவள் திருநீறு தணிக்கும்
தூய அந்த திருநீறு தொலைதூரம் மணக்கும்
மூன்று கிளையுடைய கைவேலும்
காக்குமறம் வளர்க்கும் தோளும்
மின்னும் குழையணிந்த காதும்
பார்க்கும் திசைதோறும் நீக்கமற நிறைந்திருக்கும்
No comments:
Post a Comment