மாயாதீர்த்த ஸ்வரூபிணியை…..
பல்லவி
மாயாதீர்த்த ஸ்வரூபிணியை
மாயையையகற்றும் மாயையைப் பணிந்தேன்
அனுபல்லவி
மாயன் மதுசூதனன் கேசவன் சோதரியை
தாயாக அனைவரையும் காக்குமீச்வரியை
சரணம்
தீயேந்தும் நெற்றிக் கண்ணுடையாளை
ஆயாசமின்றி அன்புடனே போற்றி
வாயாரப் பாடி உளமார நினைந்து
ஓயாமல் துதித்தேன் எனக்கருள வேண்டுமென
No comments:
Post a Comment