தங்கை மீனாக்ஷியின்…..
பல்லவி
தங்கை மீனாக்ஷியின் தலை வாறும் கேசவனைப்
பங்கய நாபனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பொங்கரவணிந்த சங்கரன் நாயகி
திங்கள் திருமுகத்தாள் அங்கயற்கண்ணியெனும்
சரணம்
திங்களும் ஞாயிறும் கண்களாயுடையவனை
அங்கமில் மன்மதனை ஈன்ற திருமாலை
செங்கண்மாலென்ற பெயர் கொண்ட மாயவனை
மங்காத புகழ் மேவும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment