सम्प्रीणाति प्रतिकलमसौ मानसं मे सुजाता
गम्भीरत्वात्क्कचन समये गूढनिक्षिप्तविश्वा ।
नालीकेन स्फुरितरजसा वेधसो निर्मिमाणा
रम्यावर्तद्युतिसहचरी रङ्गनाथस्य नाभिः ॥ ५॥
அரங்கமும், அரங்கனும்-
ஸம்ப்ரீணாதி ப்ரதிகலமஸௌ மாநஸம் மே ஸுஜாதா
கப்பீரவாத் க்வசந ஸமயே கூடநிக்ஷிப்த விச்வா
நாளீகேந ஸ்ப்புரித ரஜஸா வேதஸோ நிர்மிமாணா
ரம்யாவர்த்த த்யுதி ஸஹசரீ ரங்கநாதஸ்ய நாபி: //
அழகிய தோற்றமுடையதாய், ஆழமாயிருப்பதாய், உலகத்தையே ஒரு சமயம் தன்னுள்ளே அடக்கிகொண்டதாய், தூள்கள் மிளிர பெற்றதாய்,தாமரைப்பூவால் பிரமனை படைத்தாய், அழகிய சுழல்களுடன் விளங்குகின்ற திருவரங்கனது நாபி கமலம் என்னுள்ளத்தே புகுந்து மகிழசெய்கின்றது .
ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்.
சேதநர்கள்:
அரங்கன் யோக நித்திரை செய்யும்போது அழகாக நம்மை பார்த்துக்கொண்டு சயனித்திருப்பான்.
மார்பில் திருமகளோடு அழகிய திருவாபரணம். அந்த திருவாபரணத்துக்கும்,
அரை சிவந்த ஆடை அதன்மேல் பட்டை-
இவ்விரண்டிற்கும் இடையில் அரங்கனது நாபி கமலத்தை காணலாம்.
திருமகளின் கருணையும், பட்டை மிளிரும் ஜோதியும் பட்டு நாபி கமலம் பல மடங்கு பிரகாசித்து நம் உள்ளத்தை தூய்மையாக்குகிறது.
அரங்கனே ……
பல்லவி
அரங்கனே அகமகிழ்ந்துன் அரவிந்த பதம் பணிந்தேன்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி விழுந்து வணங்கி
அனுபல்லவி
பரம்பொருள் நீயே பரம பதநாதனே
அறம் தழைக்கும் அரங்க நகர் தனிலெழுந்தருளிய
சரணம்
கமலமலரமர் பிரமனைப் படைத்தவனே
கமலநாபனே உலகைத்தன்னுள் வைத்த
அமலனே கேசவனே அழகிய திருமார்பனே
உமது சுழல் நாபி க்கமலமாபரணம் கண்டு
No comments:
Post a Comment