அழகிய ஆஞ்சநேயனை…..
பல்லவி
அழகிய ஆஞ்சநேயனை வாயுகுமாரனை
பழகு தமிழில் பாடல் புனைந்து துதித்தேன்
அனுபல்லவி
மழலையிலேயே சாகசங்கள் பல புரிந்த
சுழல் சக்கரமேந்தும் கேசவன் தூதனை
சரணம்
நிழலென கோசலை மைந்தன் ஶ்ரீ ராமனின்
கழலடி நீங்காது உடனிருக்கும் மாருதியை
அழலேந்தும் நெற்றிக்கண்ணன் அவதாரமென்று
ஆன்றோர் பலரும் போற்றும் அனுமனை
No comments:
Post a Comment