कवीन्द्राणां चेतः कमलवन-बालातप-रुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चि-प्रेयस्या-स्तरुणतर-श्रृङ्गर लहरी-
गभीराभि-र्वाग्भिः र्विदधति सतां रञ्जनममी ॥ 16 ॥
கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலா தபருசிம்
பஜந்தேயே ஸந்த: கதிசிது அருணாமேவ பவதீம்|
விரிஞ்சி: ப்ரேயஸ்யா தருணதர் ச்ருங்காரலஹரீ
கபீராபிர் வாக்பி: விதததி ஸதாம் ரஞ்சனமமீ||
அம்மா அருணாதேவியே! அருள் புரிவாயே! ஹே அருணா ஹே அருணா!
ஹ்ருத்யத் தாமரையில் சிந்தை மகிழ வேகமதாக ச்ருங்கார கீதம் பாடி அருள்வாயே! சிவந்த உன் மேனி அழகை ஸேவித்தவர்கள் சிறந்த கவிஞராவார்கள்! ஸ்ரீ வித்யா ரூபிணியே ஸ்ரீ சக்ர வாஸினியே ச்ருங்கார ரஸ ப்ரவாஹினியே அருள் புரிவாயே! ஜய ஜய ஜகதம்ப சிவே!
அருணா தேவியே…..
பல்லவி
அருணாதேவியே கருணைக்கடலே என்
இருதயத்தாமரையில் எழுந்தருள்வாயே
அனுபல்லவி
வருமிடர் தீர்ப்பவளே கேசவன் சோதரி
இருவினைப் பயன் களையும் பெருமைக்குரியவளே
சரணம்
சிருங்கார கீதம் இசைக்கு முந்தனழகு
சிவந்த மேனி எழில் கவிஞர்கள் பாடுவார்
ஶ்ரீ சக்கரம் தனிலமர் ஶ்ரீ வித்யா ரூபிணியே
தருணமிதுவே எனையாண்டருள
No comments:
Post a Comment