உன்னருளொன்றே…..
பல்லவி
உன்னருளொன்றே போதுமே அன்னபூரணி
மன்னரும் வணங்கிடும் மாதவமே மரகதமே
துரிதம்
அரனயனரியும் நரர் சுரர் சுரபதியும்
சரவணன் கணபதி திருமகள் கலைமகள்
சுகசனகாதியர் நாரதர் தும்புரு
கரம் பணிந்தேத்தும் பரமேச்வரியே
அனுபல்லவி
இன்னருள் தருபவளே கேசவன் சோதரியே
பன்னகாபரணன் மனங்கவரீச்வரியே
சரணம்
சொன்ன சொல் காப்பவளே தாயே அபிராமி
பொன்னென ஜோலிக்கும் பேரழகே பெரியவளே
பொன் மழை பொழிந்தவளே பேராயிரமுடையவளே
தன்னிகரில்லாத ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
No comments:
Post a Comment