ஸ்ரீலலிதாஸ்தவரத்னம்
तत्रालये विशाले तपनीयारचित-तरल-सोपाने ।
माणिक्य मण्डपान्तर्महिते सिंहासने मणीखचिते ॥ २९॥
29.தத்ராலயே விசாலே தபநீயாரசித தரள ஸோபாநே
மாணிக்ய மண்டபாந்தர் மஹிதே ஸிம்ஹாஸநே மணீகசிதே ||
அந்த விசாலமானமாளிகையில்
மாணிக்ய மண்டபத்தினுள் தங்கத்தாலான பளபளக்கிற படிகளுள்ள ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சீரிய ஸிம்ஹாஸனத்தின் மீது மந்திரிணீ அமர்ந்துள்ளாள். (29)
ஶ்ரீ லலிதாம்பிகையை……
பல்லவி
ஶ்ரீலலிதாம்பிகையை மந்த்ரிணியைத்துதித்தேன்
மாலன் கேசவன் சோதரியை ஈச்வரியை
அனுபல்லவி
ஆலமுண்ட நீலகண்டன் பணியும் பராசக்தியை
ஞாலம் தனைக் காக்கும் அகிலாண்டேச்வரியை
சரணம்
சாலச்சிறந்த மாணிக்க மண்டபத்தில்
பத்தரை மாற்று தங்கப் படிகளுள்ள
ரத்தினம் பதித்த சொர்ண சிங்காதனத்தில்
வீற்றிருக்கும் பாலா திரிபுரசுந்தரியை
No comments:
Post a Comment