நாளுமுனைப்போற்றி…..
பல்லவி
நாளுமுனைப்போற்றி மறவாமல் பாடினேன்
ஆளுமீசனே கேசவனென் நேசனே
அனுபல்லவி
தோளுக்கினியானில் பவனி வருமரங்கனே
ஏளனமேனய்யா ஏழையென் மீதிலே
சரணம்
ஏளனம் செய்த சிசுபாலனை வதம் செய்தவனே
மாளும் படி அரக்கன் இரணியனைச் செய்தவனே
வேளுக்கையில் ஆளரியாய்க் காட்சிதரும் திருமாலே
தாளினைப் பணிந்தேன் தயை புரிவாயென வேண்டி
No comments:
Post a Comment