மாயன் வாசுதேவனை…..
பல்லவி
மாயன் வாசுதேவனை வடமதுரை மைந்தனை
வேயர் விட்டு சித்தர் மகள் துதித்தவனைத்துதித்தேன்
அனுபல்லவி
காயாம்பூ வண்ணனை மாதவனைக் கேசவனை
பேய் முலையுண்ட முகுந்தனை கோவிந்தனை
சரணம்
ஆயர்பாடிக்கண்ணனே பாற்கடல் நாராயணன்
தாயார் யசோதை நேசிக்கும் தாமோதரன்
தூய அன்புடனே துணை இணையாய்க் கொண்டாடி
நேயமுடன் நேசித்தேன் ஆய்ப்பாடி கோபாலனை
*கிருஷ்ணருக்கும் நாராயணருக்கும் உள்ள வித்தியாசம்:* ஒரு நீதிபதியானவர் தனது வீட்டிலிருக்கும்போது தனது உண்மையான, இயல்பான நிலையில் இருப்பார். வீட்டிலிருக்கும் யாரும் அவரை ஒரு நீதிபதியாக பார்ப்பதில்லை. மாறாக, அவர் குடும்பத்தின் ஒரு அன்பான உறுப்பினராக பார்க்கப்படுகிறார். *அவர் மற்றவர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டும், தன் குழந்தைகளுடன் விளையாடியபடியும், அன்பான உறவில் ஈடுபட்டிருப்பார்.* அவருடைய குழந்தைகள், அவரின் தோள்களின் மீது ஏறி ஜாலியாக விளையாடுவார்கள். அதே நீதிபதியானவர், கோர்ட்டுக்கு சென்றால் மிகவும் மிடுக்காக, அதிகாரத் தோரணையில் இருப்பார். *மற்றவர்கள் அவரை மிகவும் உயர்வான நிலையில் வைத்து மரியாதையுடன் பார்ப்பார்கள்*. ஒரே நபர்தான் மரியாதைக்குரிய நீதிபதியாகவும், அன்பான தகப்பனாராகவும் இருக்கிறார். அவர் அன்பான உறவையும், மரியாதையையும் அனுபவித்தாலும், அவருக்கு *அதிகம் சந்தோசம் கொடுப்பது அன்பான உறவே ஆகும்.*
அதேபோல், *முழு முதற் கடவுள் கிருஷ்ணர் ஆன்மீக உலகில் தனது கோலோக விருந்தாவனத்தில் இருக்கும்போது, அவரை யாரும் முழு முதற் கடவுளாக பார்ப்பதில்லை. கோலோகத்தில் உள்ள அனைவரும் அவருடன் தூய அன்பான உறவில் ஈடுபட்டுள்ளனர்.
முழு முதற் கடவுள் கிருஷ்ணர், நாராயணராக விரிவடைந்து வைகுண்ட லோகத்தில் இருக்கும்போது, வைகுண்ட லோகத்தில் உள்ள அனைவரும் அவரை மிக்க பிரமிப்புடனும், மரியாதையுடனும் முழு முதற் கடவுளாக வணங்குகிறார்கள்.* கிருஷ்ணரும், நாராயணரும் வேறு வேறு அல்லர்.
கிருஷ்ணரே நாராயணராக விரிவடைகிறார். முழு முதற் கடவுள் கிருஷ்ணர் கோலோகத்தில் கிடைக்கும் தூய அன்பான உறவையும், வைகுண்டத்தில் கிடைக்கும் மரியாதையையும் அனுபவித்தாலும், அவருக்கு *அதிக சந்தோஷத்தை கொடுப்பது தூய அன்பினாலாகிய உறவே ஆகும்.*
No comments:
Post a Comment