கதியவள் கழலடி…..
பல்லவி
கதியவள் கழலடி நிழலே துணையென
மதியணிந்தவளின் திருவடி துதித்தேன்
அனுபல்லவி
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவள்
குதிரையை வதைத்த கேசவன் சோதரி
சரணம்
மதி மதியெனச்சொல்லி மயக்கம் தெளியவும்
மதி மதி யென்றுரைத்து மாயையை விலக்கவும்
மதி மதி யென உரைத்து மாயப்பிறப்பறுக்கவும்
மதி மதியென்றள் மலர்ப் பதமே நினைந்து
மதிமதி என்றிட மயக்கம் தெளியும்
மதிமதி என்றிட மாயை விலகும்
மதிமதி என்றிட மாயப் பிறப்பறும்
மதிமதி என்றிட கதியவள் தானே 😇
அம்பிகையின் திருவடிகளில் சரணம்.....
No comments:
Post a Comment