நானுனக்கு பாரமா….
பல்லவி
நானுனக்கு பாரமா தாயே தர்மாம்பிகை
ஏனிந்தப் பாரா முகம் ஏழையெனக்கருள
அனுபல்லவி
ஆனிறைகள் மேய்த்த கேசவன் சோதரியே
தேனினுமினிய மொழி பேசுமீச்வரியே
சரணம்
வானுறை தேவரும் கானுறை முனிவரும்
பானுவும் சந்திரனும் தேனுவும் வணங்கிடும்
மான் விழியாளே அறம் வளர்த்த நாயகியே
வான் புகழ் கொண்டவளே மலர்ப்பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment