மூக்குத்தி மின்னலை…….
பல்லவி
மூக்குத்தி மின்னலைக் கண்டேன் மீனாக்ஷி
வாக்களித்தெனையேயுன் புகழ் பாட வைத்தாயே
அனுபல்லவி
காக்கும் கடவுள் கேசவன் சோதரியே
தீக்கனலேந்தும் முக்கண்ணியே தாயே
சரணம்
நாக்கில் சரச்வதியை நடமிடச்செய்தாயே
நோக்குவோர் மதிக்கும் நிலையளித்தாயே
நீக்கமற நிறைந்திருக்குமாதி பராசக்தியே
சாக்காடு பிறவியெனும் பிணி போக்கியருள்வாயே
No comments:
Post a Comment