பக்தி செய்தேன்…..
பல்லவி
பக்தி செய்தேன் சக்தி உனதருள் வேண்டி
முக்தி பெறும் வழிதேடி என்றென்றும் தாயே
துரிதம்
சுக்கிரன் முதலான கோள்கள் முனிவர்கள்
விக்கின விநாயகனிந்திரன் நரர் சுரர்
சக்கரக்கையன் கேசவன் நான்முகன்
அக்கினிக்கண்ணனும் வணங்கிடுமுனையே
அனுபல்லவி
உக்தி உபாயம் வேறறியேன் ஈச்வரியே
பக்தருக்கருள் தரும் கேசவன் சோதரியே
சரணம்
தக்கன் வேள்வியைத் தவிடு பொடியாக்கிய
சொக்கநாதன் மனங்கவர் நாயகியே மீனாக்ஷி
அக்கினியை நெற்றிக் கண்ணாய் வைத்தவளே
குக்குடக் கொடியோன் அன்னையே குணவதியே
No comments:
Post a Comment