மறை போற்றும்……
பல்லவி
மறை போற்றும் இறைவன் சிவனைத் துதித்தேன்
குறையொன்றுமில்லாத கேசவன் நேசன்
அனுபல்லவி
கறை பிறவிப் பிணிதீரக்கரும வினைப் பயனகல
சிறையடல் களந்து இனி பிறவாதிருக்க
சரணம்
அறவோரந்தணர் போற்றும் ஆலால கண்டனை
அறக்கருணையருளும் அகிலாண்டேச்வரனை
மறக்கருணை புரிந்து திரிபுரனை எரித்தவனை
துறையூர் தலம் வளர் ந ந்திகேச்வரனை
No comments:
Post a Comment