ஶ்ரீராமஜயமென்று…….
பல்லவி
ஶ்ரீராமஜயமென்று சொன்னாலும் போதும்
தீரா வினை தீரும் திருவருள் சேரும்
அனுபல்லவி
ஆராவமுதன் கேசவன் அவனது
ஓராயிரம் பெயர் சொன்ன பலனுண்டாகும்
சரணம்
பாரோர் பலரும் தினமெழுதும் திருநாமம்
மாறாத பக்தியுடன் மாருதி துதிக்கும் நாமம்
வேறோர் திருநாமம் இதற்கீடில்லை
பேராளன் பெருமைமிகு நாராயணன் நாமம்
No comments:
Post a Comment