அனைத்தும் நீயே…….
பல்லவி
அனைத்தும் நீயே ஆதி கேசவா
முனைப்புடன் பணிவோர்க்கு அருள்தருவோனே
அனுபல்லவி
சுனை நீராய்க் கருணை சுரக்கும் மாதவனே
வினைப் பயனனைத்தையும் களைந்திடுவாயே
சரணம்
மனை மக்கள் சுற்றமென்றே நினைத்துத் திரிந்தேன்
தினையளவும் உனை நினையாதிருந்தேன்
மனம் திருந்தி வருந்தியே இன்று
உனையே துதித்தேன் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment