தயவில்லையா……
பல்லவி
தயவில்லையா ஶ்ரீராமா என் மேல்
அயர்வின்றி அனுதினமுனையே துதித்தேன்
அனுபல்லவி
ஜயராமனுனையே தாய் தந்தையென நினைத்தேன்
அயோத்தி மன்னனே கேசவனே மாதவனே
சரணம்
கயல் விழியாள் சீதையின் மனங்கவர் நாயகனே
உயர்ந்த பதவியோ பொருள் புகழோ வேண்டேன்
துயரிடர் பவபய மில்லாத வாழ்வும்
மயற்வற மதி நலமும் தந்தாலே போதும்
No comments:
Post a Comment