Thursday, 11 May 2023

திருமகள் லக்ஷ்மியை…..



                                                  திருமகள் லக்ஷ்மியை…..


                                                        பல்லவி

                                    திருமகள் லக்ஷ்மியை தினமும் துதிப்போம்

                                    திருமால் கேசவனருள் பெற வேண்டி

                                                      அனுபல்லவி

                                   திருமால் திருமார்பில் வாசம் செய்பவளை

                                   திருவென்னும் பெயராளை கடலரசன் மகளை     

                                                         சரணம்

                                  சொர்க்கத்தில் விளங்கும் சொர்க்கலக்ஷ்மியை

                                  ராஜ்ஜியத்தைக் காக்கும் ராஜலக்ஷ்மியை

                                  இல்லங்களிலிருக்கும் கிருஹலக்ஷ்மியை

                                  தங்கமயமான கனக மகா லக்ஷ்மியை      

                       

                                  தீபங்களிலிலங்கும் தீப லக்ஷ்மியை

                                  தாமரைப்பூவிலுறை பத்மாவதியை                                                                     

                                  ஜோதிமயமான ஜோதிலக்ஷ்மியை

                                  சந்தானமருளும் சந்தானலக்ஷ்மியை      

                         

                                  செல்வ வளமருளும் செல்வாம்பிகையை

                                  சௌபாக்கியம் தரும் பாக்கியலக்ஷ்மியை

                                  தனம் பெருகச்செய்திடும் தனலக்ஷ்மியை    

                                  அன்னம்தனையளிக்கும்  அன்னலக்ஷ்மியை                            

                                  

 🪔ஐஸ்வர்யம் அருளும் மகாலட்சுமி தரிசனம்🪔

🪷தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள்,வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்,சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமியாகவும்,ராஜ்ஜியத்தில் ராஜ்ய லட்சுமியாகவும்,இல்லங்களில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறார்கள்‌‌.

🪷மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள்.இப்பிறவியில் செல்வ வளமும்,பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள்.

🪷நெல்லி மரத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள்.துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்தால் ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.தனக்கு நெல்லிக்கனி தானம் செய்த பெண்ணுக்காகஆதிசங்கரர் ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடினார்.மகாலட்சுமி அருளால் பொன்னும் பொருளும் கிடைத்தது.

🪷மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்புஅமாவாசை,பவுர்ணமி,சதுர்த்தி,அஷ்டமி,நவமி,திங்கட்கிழமையில் வில்வ இலைகளைப் பறிக்கக் கூடாது.

உ🪷லட்சுமியை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம்.மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வாமனபுராணம் கூறுகிறது.

🪷பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள்.இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்த பின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும்.

🪷லட்சுமியின் அம்சமான துளசி செடியை மாடம் வைத்து,அதை தினமும் சுற்றி வந்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். 🪷மகாவிஷ்ணுவின் அருள் பெற வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.எப்போதும் பிரியாமல் மகாவிஷ்ணுவுடன் சேர்ந்தே இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே சிறந்தது. 🪷மகாலட்சுமியின் அருளைப் பெற உகந்த கிழமை வெள்ளி.சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி.எனவே இந்நாளில் சூரிய உதயமானதும் லட்சுமியை பூஜிப்பது சிறப்பு.🪷மகாலட்சுமியை பூஜித்த இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யம்,ஐராவதம் என்னும் யானை,அமராவதி பட்டணத்தை பெற்றார்.பூரணகும்பம்,மஞ்சள்,குங்குமம்,திருமண் சூர்ணம்,கோலம்,சந்தனம்,வாழை,மாவிலை தோரணம்,வெற்றிலை,திருவிளக்கு,யானை,பசு,கண்ணாடி,உள்ளங்கை,தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி தங்கியிருக்கிறாள்.

🪷லட்சுமி மாதுளம் பழத்தில் இருந்து தோன்றியதால் மாதுளங்கி என்றும்,

பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும்,

அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும்,

ஜனகரின் மகளானதால் ஜானகி என்றும்,

பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும்

பாற்கடலிலிருந்து தோன்றியதால் ‘ஸ்ரீ’ என்றும் போற்றப்படுகிறாள்.


No comments:

Post a Comment