புதிதாகப் பல சொல்லி…….
பல்லவி
புதிதாகப் பல சொல்லி உனைப்போற்றி நான் பாட
மதியருள்வாய் மாதவனே கேசவனே எனக்கு
அனுபல்லவி
விதிப்பயனால் கட்டுண்ட என் நிலையை மாற்றி
நதி கடலில் சேர்வதுபோலுனைச்சேர அருள்வாய்
சரணம்
அதிகம் செல்வமும் செல்வாக்குமடைந்த
மதி மயக்கத்துடன் திரியும் மதியீனர்களையும்
எதிரில் நீ நின்றாலுமுணராத மூடரையும்
கதியென்றாடையாத நிலையெனக்கருள்வாய்
உதிக்கின்ற கதிரவனின் ஒளியை விடவும்
அதிகம் ஒளியுடைய திருநாராயணனே
அதிசயமான அமானவனைப் படைத்தவனே
துதி செய்தேனுந்தன் திருவடியே சரணமென
No comments:
Post a Comment