பரியேறும் பெருமாளை……
பல்லவி
பரியேறும் பெருமாளை கள்ளழகன் கேசவனை
அரிநாராயணனை பரிந்தருள்வாயெனத் துதித்தேன்
அனுபல்லவி
கரியவனை மாதவனைக் கார்மேகவண்ணனை
சரி நிகர் சமானம் தனக்கொருவரில்லாத
சரணம்
புரிந்தும் புரியாதவன் போல் நடிக்கும் யாதவனை
கிரிதர கோபாலனை மாயனை மதுசூதனனை
திரிவிக்கிரமானாயுலகளந்த பெருமாளை
உறியேரி வெண்ணைதனைத் திருடி உண்ட கண்ணனை
No comments:
Post a Comment