நம்பிக்கை இல்லாதவர்களை... நீ... இல்லை... எதற்கு இந்த வேண்டுதல்கள்? அளவுக்கு மீறி சாமி கும்பிடாதே என்று சுட்டிக்காட்டி சிரிப்பவர்களை பார்த்தால்... கோபம் வரவில்லை... அம்மா கௌமாரி அவரவர் கஷ்டங்களில் , உடல் வேதனைகளின் கடின நேரம் உன்னை விரும்பி நினைப்போர்க்கு ... அந்நிமிடமே அதைக்களைந்து ,
நம்பிக்கை தருபவள் நீ... அந்த மாபெரும் சக்தியை... சொல்லி புரியவைக்க முடியாது அம்மா... புரியவைக்க வேண்டியதுமில்லை... எவருக்கும்... தாய் நீ... உன் காலடியில் நாங்கள் கௌமாரியே சரணமம்மா...!
தாயே கௌமாரியுன்……
பல்லவி
தாயே கௌமாரியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
ஓயாதுனைத்துதிக்கும் அடியார்க்கருள்பவளே
அனுபல்லவி
மாயன் மதுசூதனன் கேசவன் சோதரியே
தூயவள் நீயே தினம் துதித்தேன் உனையே
சரணம்
மாயே உனைத்துதிக்கும் எனைப் பார்த்து சிரிப்பவரை
காயப் படுத்தாமல் கனிந்தருள வேண்டினேன்
ஆயாசத்துடனே உனை வேண்டும் பக்தருக்கு
நோயும் வேதனையும் நொடிப்பொழுதில் தீர்ப்பவளே
No comments:
Post a Comment