தேடித்தேடியுனை….
பல்லவி
தேடித்தேடியுனை அலைந்தேன் நரசிங்கா
ஆடியாடித் துதி பாடிப்படியே
அனுபல்லவி
கோடிவினை தீர்க்கும் கோவிந்தா கேசவா
நாடி நாடியுன் அரவிந்த பதம் தனை
சரணம்
ஈடிணையில்லாத கலியுகத் தெய்வமே
ஓடி வந்தேனுன் திருத்தலக் கோவிலுக்கே
வாடி நின்றேனுன் சந்நிதி முன்னே
வேடிக்கை செய்யாமலெனக்கருள்வயென
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்றுவாடி வாடும் இவ் வாள் நுதலே
ஒளிபொருந்திய நெற்றியையுடையளான இப்பராங்குச நாயகி பலகாலும் ஆடி மனமுருகி பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி கண்களில் நீர்நிரம்பப் பெற்று எவ்விடத்தலும அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து நரசிங்கமூர்த்தியே! என்று கதறி (அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள்
No comments:
Post a Comment