Thursday, 4 May 2023

பெருமைக்குரிய…..

 ந்ருஸிம்ஹ பெருமானே! உன்னையே சரணமடைகின்றேன்....!!!


त्वयि रक्षति रक्षकैः किमन्यैस्त्वयि चारक्षति रक्षकैः किमन्यैः ।
इति निश्चितधीः श्रयामि नित्यं नृहरे वेगवतीतटाश्रयं त्वाम् ॥ ८॥


த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை:

த்வயி சாரக்ஷதி ரக்ஷகை: கிமந்யை: |

இதி நிச்சித தீ: ச்ரயாமி நித்யம்

ந்ருஹரே வேகவதீ தடாச்ரயம் த்வாம்||

ஸ்வாமி தேசிகர் ♦ காமாஸிகாஷ்டகம்

ந்ருஸிம்ஹ பெருமானே! எனக்கு ஓர் எண்ணம் உறுதியாக உண்டாகிவிட்டது. அதாவது "நீ ஒருவனை காக்க முற்பட்டு விட்டால் மற்ற தெய்வங்களை நாடவேண்டியதேில்லை. நீயே முன்னின்று காக்கும் பொழுது அவர்களை ஏன் நாடவேண்டும் ? நீ ஒருவனைக் காவாது தண்டிக்க முற்பட்டு விட்டாலும் மற்ற தெய்வங்களை நாடுவதில் பயனில்லை. ஸர்வ சக்தனான நீ ஒருவனைக் கைவிட நினைத்து விட்டால் அற்ப சக்தியுடைய மற்ற தெய்வங்களால் அவனைக் காக்க வியலுமோ? ஆதலின் அவற்றை நாடிப் பயனில்லை" என்பது. இந்த மனவுறுதியால் வேறொருவரை நாடாமல் இங்கு வேகவதிக்கரையில் எழுந்தருளியுள்ள உன்னையே எந்நாளும் சரணமடைகின்றேன்.

       

                                                    பெருமைக்குரிய…..


                                                            பல்லவி

                                             பெருமைக்குரிய நரசிம்மனைத் துதித்தேன்

                                             தருமநெறிகாக்க தரணியிலவதரித்த

                                                         அனுபல்லவி

                                             இருவினைப் பயன் தொலைய பக்தருக்கருளும்      

                                             திருமாலைக் கேசவனை வேகவதிக்கரையிலுறை  

                                                              சரணம்                                       

                                             ஒருவனைக் காக்க அவன் நினைத்து விட்டால்

                                             மறு தெய்வமவர் நாடத் தேவையில்லை

                                             ஒருவனை தண்டிக்க  முனைந்து விட்டால்

                                             பிற தெய்வமவனைக் காக்க வருவதில்லையெனும்

               

No comments:

Post a Comment