மாதே…..
பல்லவி
மாதே மலையத்வசன் பெற்ற
மாதவமே உன் மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
மாதவன் கேசவன் மனமகிழ் சோதரி
மாதங்கி நீயே மதங்கர் குல தனமே
சரணம்
வேதங்கள் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
சாதித்த புண்ணியர் முனிவர்கள் பணிந்தேத்தும்
பாதிமதியணிந்த பரமேச்வரியே
ஆதரவு நீயே அகிலாண்டேச்வரியே
துரிதம்
ஆதித்தனம்புலி சுகசனகாதியர்
மேதினியோர் தேவர்கள் சுரபதி நாரதர்
கோள்களொன்பதும் நந்தியும் கணங்களும்
வேதியோரோதும் மறைகளும் வணங்கிடும்
No comments:
Post a Comment