சங்கரன் மகன்
பல்லவி
அங்கிங்கெனாதபடி எங்கும் குடிகொண்டிருக்கும்
எளிய கணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சங்கடமிடர் நீக்கும் ஆனைமுகத்தோனை
மங்கள மூர்த்தியை மறை போற்றும் தேவனை
சரணம்
அங்குசபாசமுமீட்டியும் மோதகமும்
பங்கய மலரும் கரங்களிலேந்திடும்
அய்ங்கரனைக்கரிமுகனை கேசவன் மருகனை
சங்கரன் மகனை வாரணமுகனை
No comments:
Post a Comment