செங்கமலவல்லித்தாயார்
பல்லவி
செங்கமலவல்லியை தங்கநிறத்தாளை
மங்களம் தருபவளை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
சங்கும் சக்கரமுமேந்தும் கேசவனின்
பங்கய மலர் மார்பை அலங்கரிக்கும் அழகிய
சரணம்
திங்கள் திருமுகத்தாளை திருவென்னும் பெயராளை
சங்கரியும் சரஸ்வதியும் நேசிக்கும் திருமகளை
தங்கும் நிதியளிக்கும் பங்கய பதத்தாளை
எங்கும் நிறைந்திருக்கும் மகாலஷ்மியை
No comments:
Post a Comment