ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி
பல்லவி
உன்னருள் ஒன்றே போதும் அன்னையே
சின்னஞ்சிறியேன் நலமுடன் வாழ்ந்திட
துரிதம்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி
சங்கரி கௌரி திரிபுரசுந்தரி
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவன் சோதரி
பன்னகாபரணன் மனங்கவர் நாயகி
சரணம்
உன்னுருவே என்றும் கண்ணாரக் கண்டேன்
உன் நினைவே தினம் சிந்தையில் வைத்தேன்
உன்திருநாமமே வாயார உரைத்தேன்
உனதிரு திருவடியே மனமாரத் துதித்தேன்
No comments:
Post a Comment