ஆனைமுகன்
பல்லவி
மலரலங்காரம் புனைந்த கணபதியை
மலர்ப் பதம் பணிந்து மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்றென
அனைத்துமாகி நின்ற ஆனைமுகத்தோனை
சரணம்
குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு பதவியென
நலம் யாவுமளித்திடும் கேசவன் மருகனை
தலங்களுள் சிறந்த மணக்குளம் திருத்தலத்தில்
நலமுடன் எழுந்தருளிக் காட்சி யளித்திடும்
No comments:
Post a Comment