ஸ்ரீ மகாலக்ஷ்மி
பல்லவி
மனங்கனிந்தருள்வாய் மகாலக்ஷ்மி
உனதருளில்லையேல் உலகமுய்யுமோ
அனுபல்லவி
முனிவரும் தேவரும் பிரமனும் வணங்கிடும்
அனங்கனின் தாயே கடலரசன் சேயே
சரணம்
ஜனன மரண பயம் எனை விட்டகலவும்
தனம் புகழ் குலமனைதும் நானடைந்திடவும்
தினமுமுன் நாமமே மனமாரத் துதித்தேன்
கனிவுடன் கேசவன் மார்பிலுரறைபவளே
No comments:
Post a Comment