நிரஞ்சனன் பாதம்
பல்லவி
வேதங்கள் கொண்டாடும் பாதம் பணிந்தேன்
மாதவன் கேசவன் மதுசூதனன் அவனது
அனுபல்லவி
வாதம் புரிந்திடும் வல்லவரும் மறையோதும்
வேதியரும் ஞானியரும் அடையத் துடித்திடும்
சரணம்
மாதவளைத் தன் மார்பில் வைத்திருக்கும் மாலவன்
யாதவகுலத்துதித்த ஸ்ரீ க்ருஷ்ணன் கோவிந்தன்
சீதக் கடலில் பள்ளிகொண்ட ஸ்ரீதரன்
பூதலம் போற்றும் நாராயணன் அவனின்
No comments:
Post a Comment