அரசாப விமோசனப் பெருமாள்
பல்லவி
அரசாபம் தீர்த்தவனை ஆதிகேசவனை
பரமபத நாதனை மனமாரத் துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நாரதர் சுகசனகாதியர்
பிரமன் இந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
கரன்முரனரக்கரை வதம் செய்தவனை
சரணடைந்தவர்க்கருளும் கருணாமூர்த்தியை
சரணம்
மரணம் பிறப்பெனும் பவச்சுழல் கடந்திட
வரம் தரும் வரதனைப் பேரருளாளனை
அரவணை துயிலும் பாற்கடல் வாசனை
அரவிந்த பதத்தானை கண்டியூர் தலத்துறை
No comments:
Post a Comment