அருளரங்கன்
பல்லவி
உன்னையறிந்ததனால் என்னையுணர்ந்தேன்
கன்னலே கேசவனே திருவரங்கத்தம்மானே
அனுபல்லவி
அன்னையும் தந்தையும் குருவும் நண்பனும்
உன்னையல்லாலினி வேறில்லையெனக்கு
சரணம்
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதல்வோனே
இன்னும் வானோர்க்கும் இந்திரற்கும் வேந்தே
பன்னகசயனனே பாற்கடல் வாசனே
பின்னையும் பிறவா வரமளித்தெனைக் காப்பாய்
************
யானே என்னை அறியகி லாதே யானே என்றன தேயென் றிருந்தேன் யானே நீ ; என் உடமையும் நீயே வானே ஏத்துமெம் வானவ ரேறே!
"வானவர்கள் ஏத்திப் போற்றி செய்யும் நித்திய சூரிகளின் தலைவராக விளங்குபவரே! 'நான் யார்?என்உள்ளம் யார்?என்பதை அறியாதவனாகி வாழ்ந்து கொண்டிருந்தேன் 'யான்'என்னும் அகப்பற்றும்,'என
No comments:
Post a Comment