வைகுந்தவாசன்
பல்லவி
பையத்துயில்கின்ற பாற்கடல் வாசனை
ஐயனைக் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தையலாள் திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும்
மெய்யப்பனைக்கரு நீல வண்ணனை
சரணம்
கையில் சங்கும் சக்கரமுமேந்தும்
உய்யக்கொண்டானை உலகளந்த பெருமாளை
நையப்புடைத்து அரக்கர் குலமழித்து
வையகம் காத்திடும் வைகுண்ட வாசனை
**************
“பாற்கடலில் பையத் துயின்ற பரமன்"
இதில் “பையத் துயின்ற’ என்பதற்கு ஆழமான பொருளுண்டு.
பாம்பணையில் துயில்கின்றதுபோ ல் பாவனை செய்யும் பரமனின் அறிதுயில்தான் உலகை காவல்புரிந்துகொ ண்டிருக்கிறது.
அவர் உண்மையாக உறங்கிவிட்டால் உலகம் அழிந்துபோகும்.
இந்த அரிய தத்துவத்தைக் கேட்கும் மேல்நாட்டினரும் , நாத்திகவாதிகளும ், “உறங்குகின்ற தெய்வம் எப்படி உலகைக் காக்கும்?’ என்று வினா எழுப்புவர்.
சிந்தனைக்கு ஆழமுண்டு என அறியாதவர்கள்.
“பையத் துயின்ற’ என்னும் இரு சொற்களுமே அழகிய தமிழ்ச்சொற்கள். “துயில்’ என்பது உறக்கம். “பைய’ என்றால் மெதுவாக.
ஆக பையத் துயிலுதல் என்றால் மெதுவாக உறங்குதல். அது என்ன மெதுவாக உறங்குதல்?
உறங்குவதுபோன்ற நிலை. அதனை “அறிதுயில்’ என்பர். அதாவது அறிவுடன் விளங்கும் துயில். எனவே காக்கும் கடவுளான பரந்தாமன் தூங்குவதுபோல் எந்நேரமும் விழித்திருக்கிற ான்.
“மெய்மறந்து தூங்குவது’ என்பார்களே, அதுபோன்ற தூக்கமல்ல பரந்தாமனின் தூக்கம். அப்படி அவரால் தூங்கவும் முடியாது. காரணம் அவர் படுக்கையும், படுத்திருக்கும் இடமும்.
அவர் வசிப்பதோ ஓயாது அலைவீசும் திருப்பாற்கடல். ஆகவே அலை ஒலி ஒரு பக்கம்!
படுக்கையோ ஆதிசேஷனாகிய ஆயிரம்தலைப் பாம்பு! அந்தப் பாம்பின் மூச்சொலி பரந்தாமன் காதுகளுக்கருகே!
அந்தப் பாம்பு புரண்டுகொண்டே இருப்பதால் ஓயாத அசைவு. வருமா உறக்கம்?
ஆகவே அவ்வப்பொழுது கண்ணை மூடித் தூங்குவதுபோல் அனைத்தையும் அறிந்தபடி இருப்பார்.
அதைத்தான் “பையத் துயின்ற பரமன்’ என்று பைந்தமிழ்ப் பாவால் பாடினாள் ஆண்டாள்.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என்ற நான்கு கோலங்களில் காட்சி தருபவர் திருமால். இருப்பினும் அவர் பெரிதும் விரும்புவது கடல் அலை தாலாட்டும் பள்ளிகொண்ட கோலமே.பையத்துயின்ற பரமனடி பாடிப் பணிவோம்
(Courtesy: Sujatha Rana)
பல்லவி
பையத்துயில்கின்ற பாற்கடல் வாசனை
ஐயனைக் கேசவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தையலாள் திருமகளைத் தன் மார்பில் வைத்திருக்கும்
மெய்யப்பனைக்கரு நீல வண்ணனை
சரணம்
கையில் சங்கும் சக்கரமுமேந்தும்
உய்யக்கொண்டானை உலகளந்த பெருமாளை
நையப்புடைத்து அரக்கர் குலமழித்து
வையகம் காத்திடும் வைகுண்ட வாசனை
**************
“பாற்கடலில் பையத் துயின்ற பரமன்"
இதில் “பையத் துயின்ற’ என்பதற்கு ஆழமான பொருளுண்டு.
பாம்பணையில் துயில்கின்றதுபோ
அவர் உண்மையாக உறங்கிவிட்டால் உலகம் அழிந்துபோகும்.
இந்த அரிய தத்துவத்தைக் கேட்கும் மேல்நாட்டினரும்
சிந்தனைக்கு ஆழமுண்டு என அறியாதவர்கள்.
“பையத் துயின்ற’ என்னும் இரு சொற்களுமே அழகிய தமிழ்ச்சொற்கள்.
ஆக பையத் துயிலுதல் என்றால் மெதுவாக உறங்குதல். அது என்ன மெதுவாக உறங்குதல்?
உறங்குவதுபோன்ற நிலை. அதனை “அறிதுயில்’ என்பர். அதாவது அறிவுடன் விளங்கும் துயில். எனவே காக்கும் கடவுளான பரந்தாமன் தூங்குவதுபோல் எந்நேரமும் விழித்திருக்கிற
“மெய்மறந்து தூங்குவது’ என்பார்களே, அதுபோன்ற தூக்கமல்ல பரந்தாமனின் தூக்கம். அப்படி அவரால் தூங்கவும் முடியாது. காரணம் அவர் படுக்கையும், படுத்திருக்கும்
அவர் வசிப்பதோ ஓயாது அலைவீசும் திருப்பாற்கடல்.
படுக்கையோ ஆதிசேஷனாகிய ஆயிரம்தலைப் பாம்பு! அந்தப் பாம்பின் மூச்சொலி பரந்தாமன் காதுகளுக்கருகே!
அந்தப் பாம்பு புரண்டுகொண்டே இருப்பதால் ஓயாத அசைவு. வருமா உறக்கம்?
ஆகவே அவ்வப்பொழுது கண்ணை மூடித் தூங்குவதுபோல் அனைத்தையும் அறிந்தபடி இருப்பார்.
அதைத்தான் “பையத் துயின்ற பரமன்’ என்று பைந்தமிழ்ப் பாவால் பாடினாள் ஆண்டாள்.
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என்ற நான்கு கோலங்களில் காட்சி தருபவர் திருமால். இருப்பினும் அவர் பெரிதும் விரும்புவது கடல் அலை தாலாட்டும் பள்ளிகொண்ட கோலமே.பையத்துயின்ற பரமனடி பாடிப் பணிவோம்
(Courtesy: Sujatha Rana)
No comments:
Post a Comment