வண்ணமிகு கணபதி
பல்லவி
வண்ணமிகு கணபதியை மனமாரத்துதித்தேன்
பண்ணிசைத்துப் பாடி திருவடி பணிந்து
அனுபல்லவி
எண்வகை சித்தியும் எண்திசை பாலரும்
ஒன்பது கோள்களும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
விண்ணிலுறை தேவரும் முனிவரும் பிரமனும்
எண்ணிலாக் கணங்களும் நந்தியும் வணங்கிடும்
புண்ணிய மூர்த்தியைக் கேசவன் மருகனை
தண்மதி பிறை சூடும் ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment