சென்ன கேசவன்
பல்லவி
மன்னுபுகழ் மாமணியே மரகத வண்ணனே
சென்னை நகர்வளர் சென்ன கேசவனே
அனுபல்லவி
கன்னலே தேனே நான் வணங்கும் இன்னமுதே
தென்னிலங்கை சென்று அரக்கனை அழித்தவனே
சரணம்
என்னுள்ளம் புகுந்த பின்னே இனியெங்கெழுந்தருள்வாய்
பன்னக சயனனே திருப் பாற் கடலும்
உன்னுடைய பரமபதமும் வைகுந்தமும்
இன்னும் திருவேங்கடமும் தன் சோபை இழந்ததுவோ !
No comments:
Post a Comment