வேழமுகன்
பல்லவிவிந்தை வேழமுகத்தோனைத் துதித்தேன்
தந்தையும் தாயும் குருவனைத்துமானவனை
அனுபல்லவி
குந்தகமின்றி கருமங்கள் நடைபெற
முதன் முதலனைவரும் வணங்கிடும் கரிமுகனை
சரணம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
இந்திரனும் பிரமனும் அவ்வையுமகத்தியனும்
வந்தனை புரிந்திடும் ஆனைமுகத்தோனை
சிந்தையில் வைத்து சீரடி போற்றி
No comments:
Post a Comment