அழகிய சிங்கர்
பல்லவிஅனைத்துலகுமாண்டருளும் அழகிய சிங்கனுனை
நினைத்து நெஞ்சில் வைத்து அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
சினந்து இரணியனின் உடல் பிளந்த கேசவனே
தனம் தரும் திருமகளைத் திருமார்பில் வைத்தவனே
சரணம்
தினகர குலத்துதித்த ராகவனும் நீயே
அனந்தனின் மீதுறங்கும் திருமாலும் நீயே
அனைத்துயிருமியங்குவதுமுனதருளாலன்றோ
எனக்கருள வேண்டுமென்றுன் மலர்ப்பதம் பணிந்து
(Inspired by Ms.Sujatha Rana's posting)
No comments:
Post a Comment