கண்ணனும் ராமனும்
பல்லவி
கண்ணனும் நீயே ராமனும் நீயே
அண்ணலுன் திருவடியே மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
விண்ணவர் வேந்தனே விமலனே அமலனே
கண்ணுக்கினியவனே கேசவனே மாதவனே
சரணம்
மண்ணில் பலப்பல அவதாரம் எடுத்து
எண்ணிலா லீலைகள் புரிந்த தாமோதரனே
பண்ணிசைத்துன் நாமம் பாடிடும் அடியேனை
புண்ணியனே கண்பார்த்து காத்தருள வேண்டினேன்
No comments:
Post a Comment