சிங்கபெருமாள் கோயில் நரசிம்மன்
பல்லவி
இரணியனை நகத்தால் கிழித்தழித்தவனை
நரசிம்ம மூர்த்தியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வரம் தரும் கரம் நீட்டும் பரமதயாகரனை
சிங்கவேள் குன்றம் தனில் வீற்றிருப்பவனை
சரணம்
அரனயனமரரும் அஹோபில வல்லியும்
கரம் பணிந்தேத்தும் திருமாலைக் கேசவனை
சரணடைந்த பாலகனின் வேண்டுதலைச் செவிமடுத்து
இரண்டாகபிளந்த தூணிலெழுந்தருளி
No comments:
Post a Comment