நவநீதகிருஷ்ணன்
பல்லவி
எட்டெழுத்தானை நவநீதக்கண்ணனை
அட்டபுயகரனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பட்டாடையுடுத்திய வட்டநிலா முகத்தானை
கட்டழகு மேனியனைக் கேசவனை மாதவனை
சரணம்
நட்ட நடுநிசியில் யாமுனையைக் கடந்தவனை
துட்ட அரக்கன் கம்சனைக்காய்ந்தவனை
அட்டமாசித்திகளும் எட்டெட்டு கலைகளும்
எட்டு செல்வங்களும் எட்ட உதவிடும்
No comments:
Post a Comment