மகமாயி
பல்லவி
தாயே நீயே துணை மகமாயி
சேயெனைக் காத்தருளல் நின் கடனன்றோ
அனுபல்லவி
தூயவளே உன்றன் நாமமே என்றும்
ஓயாது துதித்துன் மலரடிபணிந்தேன்
சரணம்
தாயினும் மேலான தயவளிப்பவளே
மாயையை நீக்கிடும் மருந்தும் நீயே
கோயிலில் சிலையாய் வீற்றிருப்பவளே
மாயே மரகதமே கேசவன் சோதரி
No comments:
Post a Comment