திட்டை உலகநாயகி
பல்லவி
மங்களாம்பிகை உலகநாயகியை
சுகந்த குந்த ளாம்பிகையைத் துதித்தேன்
அனுபல்லவி
சங்கடமிடர் களையும் பங்கய பதத்தாளை
சங்கரி கௌரியை ஸ்ரீ லலிதாம்பிகையை
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் திரிபுரசுந்தரியை
பங்கயநாபன் கேசவன் சோதரியை
பொங்கும் மூவாசைப் பிணிதனை நீக்கி
முங்கிடச்செய்யும் பவக்கடல் கடந்திட
No comments:
Post a Comment