பழனியாண்டவன்
பல்லவி
பழநியாண்டவனை மனமாரத்துதித்தேன்
கழலடி தொழுது நாமங்களோதி
அனுபல்லவி
அழலேந்தும் நெற்றிக் கண்ணன் மகனை
குழலினையேந்தும் கேசவன் மருகனை
சரணம்
பழகு தமிழில் அவன் புகழ் பாடி
நிழலென அவனிரு இணையடி பணிந்து
விழியருளளித்து காத்திட வேண்டி
அழகன் முருகனை கலியுக வரதனை
No comments:
Post a Comment