அரங்கன்
பல்லவி
காவிரி நதிப்புறத்தில் தானாக எழுந்தருளிக்
கோவில் கொண்டிருக்கும் அரங்கனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தாவித்திரிந்திடும் நண்டும் நாரையும்
பாயும் வாளையும் கெண்டையும் மேயும்
சரணம்
மூவாசைப் பிணி போக்கும் முன் வினைப் பயன் நீக்கும்
தேவாதி தேவனைத் திருமாலைக் கேசவனை
மூவடி மண் கேட்டு உலகளந்த பெருமாளை
சேவடி போற்றி நாமங்கள் தினம் துதித்து
No comments:
Post a Comment