அய்ங்கரன்
பல்லவி
துதிப்பவர்க்கருள் தரும் துதிக்கையனை
கதியெனத் துதித்து மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
மதிசேகரன் மகனைக் கேசவன் மருகனை
மதவாரண முகனை மாதயாநிதியை
சரணம்
உதிக்கின்ற கதிரவனொளியை விடவும்
அதிகம் தேசுடைய ஆனைமுகத்தோனை
இதிகாச வேத புராணங்கள் போற்றும்
கதிர் வேலன் சோதரனைக் கரிமுகனை அய்ங்கரனை
No comments:
Post a Comment