எளிய கணபதி
பல்லவி
வெட்ட வெளியில் வீற்றிருக்கும் கரிமுகனை
மட்டவிழ் மலர்தூவி மனமாரப்ப ணிந்தேன்
அனுபல்லவி
எட்டெழுத்து நாயகன் கேசவன் மருகனை
கட்டழகு மேனியனை கணங்களின் தலைவனை
சரணம்
சுட்டெரிக்கும் அழலேந்தும் நெற்றிக்கண்ணன் மகனை
துட்ட அரக்கரை அழித்த கணபதியை
கெட்டலையுமெந்தன் விலங்கு மனத்தின்
கொட்டத்தையடக்கிட வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment